Sunday, 8 March 2020

Happy woman day

Happy woman day.....

அம்மா
அ உயிர்
ம் மெய்
மா உயிர்மெய்
உயிரையும் மெய்யையும்
இணைத்து உயிர்மெய்
ஆக்குபவள் பெண்

வீரியமானவள் பெண்
விச்சித்திரமானவள் பெண்
விவேகமுள்ளவள் பெண்
பேரன்பும்
பெருங்கோபமும்
கொண்டவள் பெண்

பிறந்தவுடன்
முலைப்பாலூட்டி
முத்தமிடுபவள்
பெண்

நான்கு காலில்
நடக்கையில்
நிலாச் சோறு ஊட்டி
உறங்க வைப்பவள்
பெண்

விடலைப்
பருவத்தில்
துருதுருவென
துணிச்சலூட்டுபவள்
பெண்

பள்ளிப் பருவத்தில்
பார்வையால்
சுகம் தருபவள்
பெண்

கன்னிப்
பருவத்தில்
காளையர்க்கு
காதலியாய் இருப்பவள்
பெண்

வேலை தேடும்
பருவத்தில்
வா தோழா
வாழ்ந்து பார்ப்போம்
என்று வலி
தாங்கும் தூணாய்
இருப்பவள் பெண்

கற்பு வாழ்க்கையில்
காமனை வெல்ல
கை கோர்ப்பவள்
பெண்

ஈரைந்து மாதங்கள்
தன்னுயிர் தந்து நம்முயிர்
ஈந்து தாயாய்
இருப்பவள்
பெண்

மலம் கழிக்கவே
முன்னூறு முறை
முக்கும் நமக்கு
ஈன்று புறந்தள்ள
தாய் பட்டபாடு
எப்படிப் புரியும்

வயிற்றைப் பற்றிக்
கவலைப் படுபவள்
தாய் மட்டுமே

பேரன்களின்
செல்லப் பாட்டியாய்
இருப்பவள் பெண்

உயிரின்
பிறப்பிடம்
பெண்
உணர்வுகளின்
உறைவிடம்
பெண்

ஊடகங்கள்
பூடகமாய்க்
காட்டும்
போகப் பொருளல்ல
பெண்

உணர்வுகள் பொங்கும்
ஊருணியாய் இருப்பவளே
பெண்

ஓர் ஆணின்
ஆசைக்கு மட்டுமே
உடணிருப்பவள் அல்ல
பெண்

ஓர் ஆணின்
எல்லா தருணங்களிலும்
உடனிருப்பவளே
பெண்

பெண்மையைப் போற்றுவோம்
பெண்மையைப் பெருமைப் படுத்துவோம்

       இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....

No comments:

Post a Comment

India vs China Business

Manufacturing Consumer Goods in India vs. China When it comes to choosing the best overseas manufacturer in Asia, two of the most common pla...